வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை நிபந்தனை மாற்றம் ஆண்டு வருமானம் ரூ.70 ஆயிரமாக அதிகரித்தது

திண்டுக்கல், செப். 19: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் ரூ.70 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அதிகளவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற்று பயன்பெறும் வகையில் நிபந்தனைகள் மாற்றம் செய்யப்பட்டு அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பயனாளியின் தாய், தந்தை அல்லது கணவன்- மனைவி ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக உயர்த்தியுள்ளனர். எனவே இதுவரை பயன்பெறாத வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் 5 ஆண்டுக்கு மேல் வேலைவாய்ப்புக்காக காத்து கொண்டிருக்கும் பதி வுதாரர்கள் (வயது வரம்பு- தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பழங்குடியினர்- 45 வயதிற்குள்ளும், இதரர் - 40 வயதிற்குள்ளும்) திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: