×

எஸ்பி மில் பகுதியில் பிஏபி கால்வாய் சீரமைப்பு

உடுமலை, செப். 19:  திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத்துக்கு, நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. உடுமலை பங்களா மேடு என்ற இடத்தில் இருந்து உடுமலை கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இது 16.630 கிமீ நீளம் கொண்டது. இதன்மூலம் சுமார் 2300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது, ரூ.5 கோடி செலவில் பிஏபி வாய்க்கால் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ஆனால் எஸ்வி மில் பகுதியில், கால்வாயின் ஸ்லாப்புகள் பெயர்க்கப்பட்டு, சீரமைக்கப்படாமல் இருந்தது. பாசனத்துக்காக வரும் 26ம்தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், வாய்க்கால் சீரமைக்கும் பணி முடியாதது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. இதுபற்றிய செய்தி கடந்த 17ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. எஸ்பி மில் பகுதியில் தற்போது சீரமைப்பு பணி துவங்கி முழுவீச்சில் நடந்துவருகிறது. தண்ணீர் திறப்பதற்கு முன்பாக சீரமைப்பு பணி நிறைவடையும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : SP Mill ,
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ