×

காலி பணியிடங்களை நிரப்பு கோரி சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப். 19:  சுகாதார ஆய்வாளர்கள் காலி பணியிடத்தை நிரப்ப கோரி நேற்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தின் முன் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகு தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மனோகரன், செயலாளர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் பணியிடத்தினை நிரப்ப வேண்டும். சுகாதார ஆய்வாளர்களுக்கு எதிரான அரசாணை எண் 337, 338-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்கள் சங்க பொது செயலாளர் உஷா ராணி, கிராம சுகாதார செவிலியர்கள், சங்க மாவட்ட செயலாளர் சாரதாம்பாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Health inspectors ,
× RELATED பர்கூர் காப்புக்காட்டில் தொட்டிகளில்...