குன்னூர் அருகே வீட்டு ஜன்னலை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

குன்னூர்,  செப்.19: குன்னூர் அருகே பட்டப்பகலில் வீட்டு ஜன்னலை உடைத்து 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.  குன்னூர் அருகே கிளண்டேள் பகுதியில் வசித்து வருபவர்  சண்முகம் (60). அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பூங்கா பணியாளராக உள்ளார்.  நேற்று வழக்கம் போல் இவரும், இவரது மனைவியும் பணிக்கு சென்றனர். பின்னர், பகல் 12 மணிக்கு  சண்முகம் வீட்டிற்கு சாப்பிட வந்தார்.அப்போது, வீட்டின் ஜன்னல் உடைந்து  கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து  சண்முகம் அளித்த புகாரின் போரில் கொலக்கம்பபை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Coonoor ,
× RELATED பெண் பயணியிடம் 5 பவுன் நகை திருட்டு