×

ஊட்டச்சத்து விழிப்புணர்வு ேபரணி மாணவர்கள் பங்கேற்பு

மஞ்சூர், செப்.19: மஞ்சூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.  மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிகளின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மஞ்சூர் பஜாரில் மாணவர்களின் பிரமாண்டமான அணிவகுப்பு நடந்தது.  பள்ளி தலைமையாசிரியர்கள் சாந்தி, ரவிக்குமார், நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மஞ்சூர் எஸ்.ஐ., சுதாகர் துவக்கி வைத்தார். இதில், பாரம்பரிய உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags :
× RELATED அணுசக்தி துறையில் தனியார்...