போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல்

கோவை, செப்.19:  கோவை குனியமுத்தூர் மைல்கல் பகுதியை சேர்ந்தவர் முகமதுஉசேன் (49), ஆட்டோ டிரைவர். இவருடைய மகன்கள் அப்பாஸ் (19), அலாவூதீன் (21). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் நின்று கொண்டு சிலரிடம் தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்த செல்வபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று அண்ணன், தம்பி இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.  இது தொடர்பாக கையெழுத்து போடுவதற்காக அவர்களது தந்தை முகமது உசேனை காவல்நிலையத்திற்கு வரும்படி தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீஸ் நிலையத்திற்கு வந்த முகமதுஉசேன், அங்கிருந்த ஏட்டு பிரதீப்பை பார்த்து எப்படி நீங்கள் எனது மகனை கைது செய்யலாம்? எனக்கேட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏட்டு பிரதீப் கொடுத்த புகாரின் பேரில் முகமதுஉசேனை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: