5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

கோவை, செப். 19: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  கோவை மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி தலைமை தாங்கினார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி  அமைப்பாளர் பார்த்தீபன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ இந்த போராட்டத்தை துவக்கிவைத்து பேசினார். இதில், பங்கேற்றவர்கள் மத்திய-மாநில அரசுகளின் உத்தரவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Advertising
Advertising

 போராட்டத்தில், திமுக தீர்மான குழு இணை செயலாளர் முத்துசாமி,  நிர்வாகிகள் சுரேந்திரன், குப்புசாமி,  ராஜராஜேஸ்வரி, கோட்டை அப்பாஸ்,  மதனகோபால்,  பாண்டி, கராத்தே ராஜேஷ், வெங்கடேஷ்,   பிரபாகரன், செந்தில்குமார், மேட்டூர் கணேசன், ஜீவா, துரை, பிரவீன்குமார்,  ஏ.ஆர்.பாலு, கோகுல்,  ஆர்.கே.சுரேஷ்குமார், அருண், சந்தோஷ், சிவபாக்கியம்,  மனோஜ்குமார், யாசர், ராஜேஷ், இஸ்மாயில், ராதா, மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கைகோவை, செப். 19: குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராசாமணி எச்சரித்துள்ளார். கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் கலெக்டர் ராசாமணி தலைமையில் நடந்தது. முகாமில் 341 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 67 ஆயிரத்து 263  மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில் கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:   தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மக்கள் தொடர்பு முகாம் மாதந்தோறும் கிராமப்புறங்களில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. வால்பாறையில் நேற்று நடந்த முகாமில் நலத்திட்ட உதவிகள் பெற 15 நாட்களுக்கு முன்னதாக மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கையாக முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

குழந்தை திருமணம் சட்டத்திற்குப் புறம்பானது. இச்சட்டத்தை மீறுவது சட்டபடி தண்டனைக்குரியது. எனவே, குழந்தை திருமணம் நடத்துவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை  பொதுமக்களிடம் ஏற்படுத்தவேண்டும். பொதுமக்களும் அலுவலர்களுடன் சேர்ந்து குழந்தை திருமணத்தை ஒழித்திட முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

Related Stories: