×

பள்ளி மாணவி மயங்கி விழுந்து சாவு

கோவை, செப்.19: கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவருடைய மகள் சுபஸ்ரீ (14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை மாணவி பள்ளி முடிந்து வழக்கம்போல் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய தாய் கதறவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மாணவியை மீட்ட அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் சுஜாதா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் இதய கோளாறால் மாணவி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED இருசக்கர வாகன நம்பரை மறைப்பதால்...