×

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப். 19:   பயணிகள்-சரக்கு ரயிலை தனியார் நிறுவனங்கள் இயக்குவதை கண்டித்து ஈரோட்டில் நேற்று ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் முன்பு டி.ஆர்.இ.யு, சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல உதவி தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உதவி செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார். இதில், ரயில்வே தனியார் மயமாக்கும் நூறு நாள் செயல்திட்டத்தை கண்டித்தும், ஏழு ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகள், 44 ரயில்வே பணிமனைகளை ரோலிங் ஸ்டாக் கம்பெனியாக மாற்றும் திட்டத்தை கண்டித்தும், பயணிகள், சரக்கு ரயில்களை கார்ப்பரேட்கள் இயக்குவதை கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ரயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Railway employees ,
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது