×

வையம்பட்டி வட்டார விவசாயிகள் 50% மானிய விலையில் விதைகள் பெறலாம் வேளாண் துறை அழைப்பு

மணப்பாறை, செப்.19: வையம்பட்டி வட்டாரத்தில் 50 சதவீத மானிய விலையில் விதைகள் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.மணப்பாறையை அடுத்த வையம்பட்டி வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் பருவ மழை பெய்துள்ளது. இதனையடுத்து, விவசாயிகள் ஆர்வமுடன் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். நடப்பு சம்பா பருவத்தில் நெல், சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு தேவையான டிகேம்-13 மற்றும் கோஆர்-51 உள்ளிட்ட தரமான சான்று பெற்ற நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உளுந்து வம்பன்-8 சான்று பெற்ற விதைகள், நிலக்கடலை தரணி மற்றும் ஜிஜேஜி-9, சான்று பெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

பயிர்களுக்கு தேவையான உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா, உயிரியல் பூச்சிக் கொல்லிகளான டி.விரிடி, சூடோமோனஸ், மெட்டாரைசியம், பேவேரியா மற்றும் நுண்ணூட்ட உரங்கள், சிறுதானியம், நிலக்கடலை, பயறு வகை, பருத்தி, தென்னை பயிர்களுக்கு இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே வையம்பட்டி வட்டார விவசாய பெருமக்கள் வேளாண் இடுபொருட்களை மானிய விலையில் பெற்று விவசாய பணிகளை மேற்கொள்ளுமாறு வையம்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநர் ரெங்கராஜன் கேட்டுக்கொண்டுள்ளார் .

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி