கூட்டு ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்த என்ஐடி-டிஐ புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி, செப்.19: திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகம் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூடென்ட்ஸுெடன் (டிஐ) கூட்டுத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகம் (என்ஐடி), டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனமும் பரஸ்பர நன்மை பயக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. டெக்சாஸ் இன்ஸ்ட்ரூடென்ட்ஸுெடன் மின்னணு அரைக்கடத்திகளை வடிவமைப்பு மற்றும் அதைச் சார்ந்த மென்பொருள் வளர்ச்சி பணிகளில் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல திருச்சி என்ஐடி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களை ஈடுபடுத்துவது மற்றும் ஒரு டிஐயின் ஆராய்ச்சி ஆய்வகத்தை என்ஐடியில் ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.பல்வேறு பொறியியல் களங்களில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக மூன்று ஆண்டுகளில் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக திட்டமிட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்ஐடி இயக்குனர் மினி சாஜி தாமஸ், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இந்தியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு அமைப்பின் இயக்குனர் சஞ்சய் வஸ்தவ் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக டிஐயானது 25 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தயாரிப்புகள் மற்றும் ஈவிஎம்களை 2019 முதல் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முடியும் வரை வழங்கும். இந்த டிஐ தயாரிப்புகள் மற்றும் இவிஎம்கள் அனலாக் ஐசி பயன்பாடுகள், பவர் மேனேஜ்மென்ட் மற்றும் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் ஆகியவற்றில் பாடத்திட்ட கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் என்ஐடியால் பயன்படுத்தப்படும். இந்த முயற்சியில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தையும் ஆதரிக்கிறது. இது இந்திய தொழில்துறையை உலகளாவிய மேடையில் போட்டியிடத் தயார்படுத்துகிறது. ஒப்பந்த நடவடிக்கைககளை கண்காணிக்க அமைக்கப்படும் குழுவில் டிஐயின் சஞ்சய் வாஸ்தவா என்ஐடி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை டீன் பேராசிரியர் உமாபதி ஆகி யோர் இடம்பெறுவர்.

Related Stories: