×

கண்டக்டர் வராததால் டிக்கெட் எடுக்கவில்ைல எனக்கூறியும் பார்வையற்ற வாலிபருக்கு அபராதம் டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட்

திருச்சி,செப்.19: திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் கண் பார்வையற்ற வாலிபர் ஒருவர் பயணித்தார். அவர் டிக்கெட் எடுக்கவில்லை. மேலும் அவரிடம் கண்பார்வையற்றோருக்கான அரசு பஸ் பாஸ் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள், அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கூறினர்.அப்போது கண்பார்வையற்ற வாலிபர், ‘‘கண்டக்டர் டிக்கெட் வழங்க என் அருகிலேயே வரவில்லை. கண் தெரியாத நான் எப்படி எழுந்து சென்று டிக்ெகட் வாங்க முடியும். என்னை உயர் அதிகாரியிடம் அழைத்து செல்லுங்கள். நான் அவரிடம் பேசி அபராதம் செலுத்துகிறேன்’’ என்றார்.உடனே டிக்கெட் பரிசோதகர்கள், டிக்கெட் எடுக்கவில்லை, பாசும் இல்லை, 500 ரூபாய் பைன் கட்டிதான் ஆகவேண்டும் என்றார். நான் அங்கே போய் கட்டுகிறேன் என பார்வையற்ற வாலிபர் கூற, வா எங்கே வேண்டுமானாலும் போகலாம் என கூறி வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு போக கூறியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒருவர், கண்பார்வையற்ற ஒருவரிடம் இப்படி கறாராக அபராதம் வசூலிக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளார். உடனே டிக்கெட் பரிசோதகர்கள், கண் தெரியாதவர் என்றால் அபராதம் விதிக்க கூடாதா என கேட்டு ரூல்சை காட்டுங்கள் என்கின்றனர்.

தொடர்ந்து செல்போனை எடுத்த டிக்கெட் பரிசோதகரில் ஒருவர், டயல் செய்து மேடம் ராமச்சந்திரன் பேசுகிறேன் என கூறி ‘‘கண்பார்வையற்ற ஒருவர் பஸ்சில் பயணித்தார். அவரிடம் பாஸ் இல்லை. டிக்ெகட்டும் எடுக்கவில்லை. சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டில் இருந்து சத்திரம் வந்துவிட்டார். இதனால் ரூ.100 அபராதம் விதித்துள்ளேன். இந்த அபராதம் போடலாமா’’ தீரன் நகர் வண்டி, என கூறினார்.எதிர்முனையில் பேசிய அந்த பெண் அதிகாரி, ‘‘என்ன ெசான்னார் என்று தெரியவில்லை. இதன்பின் ரூ.100 அபராதத்துக்கான மெமோவை கண்பார்வையற்ற வாலிபரிடம் டிக்கெட் பரிசோதகர் வழங்கினார். நான் கோர்ட்டில் அபராதத்தை செலுத்தி விடுகிறேன்’’ என்று கூறி கண்பார்வையற்ற வாலிபர் சென்றார். இந்த காட்சி சுமார் 4.27 நிமிடம் வீடியோ வைரலாக ஓடியது.இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய குடந்தை கோட்டம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், சம்மந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள் ராமச்சந்திரன், ஜெகதீசன் ஆகிய இருவரையும் நேற்று இரவு அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags : Ticket inspectors ,
× RELATED சேலம் ரயில்வே கோட்டத்தில்...