×

விபத்தில்லாத பாதுகாப்புக்காக பெல் குழுமத்திற்கு 9 தேசிய விருதுகள்

திருச்சி, செப்.19: நாட்டின் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுள், பெல் குழுமம் தனது ஆலைகளில் மிக நீண்ட விபத்து இல்லாத காலகட்டம் மற்றும் மிகக் குறைந்த விபத்து சராசரி ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த சாதனைகளுக்காக தேசிய பாதுகாப்பு விருதுகளில் அதிக எண்ணிக்கையை (மொத்தம் ஒன்பது) வென்றுள்ளது.புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் பெல் நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான நலின்சிங்கல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரிடமிருந்து இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டார். இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தால் நிறுவப்பட்ட இந்த மதிப்புமிக்க தேசிய விருதுகளை பெல் குழுமம் துவக்கம் முதலே தொடர்ந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ