தொழிலாளியிடம் டூவீலர், பணம் பறித்த 2 பேர் கைது

சேலம், செப்.19:சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த எஸ்எம்சி காலனியைச் சேரந்தவர் தியாகராஜன் (38). இவர், லாரி பட்டறையில் ரிங் மாட்டும் தொழிலாளியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியை முடிந்த இவர், பேச்சியம்மன் கோயில் தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர், திடீரென தியாகராஜனை தாக்கி, அவரது டூவீலர் மற்றும் ₹1,250 பணத்தை பறித்து சென்றனர். இதில், காயமடைந்த தியாகராஜன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில், காந்தி மகான் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (21), பாலா என்கிற மாதேஸ்வரன் (24) மற்றும்  ரவி ஆகிய மூவரும் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, பிரபாகரன் மற்றும் பாலா என்கிற மாதேஸ்வரனை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: