ரெட்டமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு

சேலம், செப். 19:  சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரெட்டமலை சீனிவாசனின் 74வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மாநில தொண்டரணி செயலாளர் இமயவரம்பன் தலைமையில் கட்சியினர் பேரணியாக செரி ரோடு வந்தனர். அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ரெட்டமலை சீனிவாசனின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து மாநில தொண்டரணி செயலாளர் இமயவரம்பன் கூறுகையில்,  சேலத்தில் ரெட்டமலை சீனிவாசனுக்கு வெண்கல சிலை வைக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் நாவரசன், மாவட்ட நெறியாளர் தாமரை செல்வன், மாநில துணை செயலாளர் பாவேந்தன், அங்கப்பன், மாவட்ட துணை செயலாளர் வேலு நாயக்கர், மேற்கு மாவட்ட செயலாளர் அய்யாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: