×

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கலெக்டர் நேரில் ஆய்வு

ஆத்தூர், செப்.19: ஆத்தூர், தலைவாசல் பகுதியில் மக்காச்சோள பயிரில், படைப்புழு தாக்குதல் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் இருப்பதாக விவசாயிகள் வேளாண் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த கலெக்டர் ராமன் தலைமையிலான குழுவினர், மக்காச்சோளம்  பயிரிடப்பட்டுள்ள நிலங்களை ஆய்வு செய்தார். அப்போது மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டால், மகசூல் பாதித்து விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படும். இதனை தவிர்க்க வேளாண் துறையின் மூலம் படை புழு தாக்குதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், ஊடுபயிர்களை மக்காச்சோள பயிருடன் இணைந்து பயிரிட வேண்டும் என அறிவுரை  வழங்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் தற்போது சென்னை வேளாண் அதிகாரிகள் பரவலாக செய்யப்பட்ட ஆய்வில் படைப்புழு தாக்குதல் மக்காச்சோள பயிரில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன் பகுதியாக ஆத்தூர், தலைவாசல் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், வேளாண் அலுவலர்களால் கூறப்படும் அறிவுரைகளை கடைபிடித்து படைப்புழு தாக்குதல் இன்றி மக்காச்சோளத்தில் லாபம் ஈட்ட வேண்டும் என பேசினார். ஆய்வின்போது தலைவாசல் ஆத்தூர் வட்டார வேளாண் அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

Tags : Inspection ,Plague Attack ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...