×

ஓசூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா

ஓசூர், செப்.19: ஓசூரில் பாஜ இளைஞரணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்தநாள் விழா பாஜ அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இளைஞரணி மாநில செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் நரேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேட்டிசேலைகளும், மாணவர்களுக்கு புத்தகம், பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, கட்சி அலுவலக வளாகத்தில் 69 மூலிகை மற்றும் செடிகள் நடப்பட்டது. இதில், அமைப்பு செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் அம்மன்சுரேஷ், மஞ்சு, மோசஸ், கிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.


Tags : Modi ,Birthday ,Hosur ,
× RELATED இந்துத்துவா சித்தாந்த வீரரான வீர...