×

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி, செப்.19: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. அதன்படி நாளை (20ம்தேதி) காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னனி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்த 18 முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் பங்கேற்கலாம். இத்தகுதியுடைய பணி நாடுநர்கள் தங்களது சுய விவரம் மற்றும் அனைத்து கல்வி சான்றுகளின் நகல்களுடன், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Tags : employment camp ,Krishnagiri ,
× RELATED இந்தியாவில் கொரோனாவில் இருந்து...