க.உவரியில் பேவர்பிளாக் சாலை

திசையன்விளை, செப். 19: கரைச்சுத்து உவரி மாரியம்மன் கோயில் தெருவில்,  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர்பிளாக் சாலையை இன்பதுரை எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் அந்தோனி அமலராஜா, வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் முருகேசன், நகர ஜெ. பேரவை செயலாளர் ஜெயக்குமார், நவ்வலடி சரவணகுமார், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் உவரி ரமேஷ், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் அந்தோனி அருள்புனிதன், துணை தலைவர் எட்வர்ட்சிங், திசையன்விளை நகர செயலாளர் சுடலைமணி, கூடங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், வள்ளியூர் நகர துணை செயலாளர் கல்யாணசுந்தரம், நவ்வலடி பாலன், விஜயாபதி நேவிசன் லியோன், துரைசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உவரி காவல்நிலையம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையையும் திறந்து வைத்தார்.

Advertising
Advertising

Related Stories: