ஏர்வாடியில் காவல் நிலையம் முற்றுகை 99 பேர் மீது வழக்கு பதிவு

ஏர்வாடி, செப். 19: ஏர்வாடி அராபாத் நகரை சேர்ந்த விவாகரத்தான ஒரு பெண்ணிற்கும், எல்என்எஸ் புரத்தைச் சேர்ந்தவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஓராண்டு முன்பு இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். அந்த பெண் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்று அப்பகுதி இளைஞர்கள் அவரை தடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே அப்பெண் ஏர்வாடி போலீசில், அராபாத் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன் உட்பட 11 பேர் தன்னை அவதூறாக பேசியும், தனது கணவரை தாக்கியதாகவும் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஜாகீர் உசேனை கைது செய்தனர்.

Advertising
Advertising

இதை கண்டித்து கடந்த 16ம் தேதி ஏர்வாடி ஜமாஅத்தார் மற்றும் அனைத்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டு சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக அனைத்து இயக்கத்தை சேர்ந்த  99 பேர் மீது அனுமதியின்றி ஊர்வலமாக செல்லுதல், காவல் நிலையம் முற்றுகை, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் ஏர்வாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: