×

திருவிருத்தான்புள்ளியில் மனுநீதி நாள் முகாம் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷில்பா வழங்கினார்

வீரவநல்லூர், செப். 19: திருவிருத்தான்புள்ளியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார். சேரன்மகாதேவி அருகே உள்ள திருவிருத்தான்புள்ளி மாவட்ட கலெக்டரின் மனுநீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார். முகாமில் வேளாண்மை, தோட்டக்கலை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு துறை அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ.9,42,834 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘தமிழக அரசு கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெற்றோர் தங்களது குழந்தைகளை கட்டாயம் கல்வி கற்க செய்ய வேண்டும். குழந்தைகளிடையே பரவி வரும் ரத்தசோகை நோயை தவிர்க்க அரசு சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு தரும் விதத்தில் பெற்றோர் தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கட்டாயம் அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்து உறுதி செய்து அதற்கேற்ப சரிவிகித உணவுகளை வழங்க வேண்டும்’ என்றார்.

இதில் சப்-கலெக்டர் ஆகாஷ், சேரன்மகாதேவி தாசில்தார் சந்திரன், நதிநீர் இணைப்பு திட்ட தாசில்தார் இருதயராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெங்கட்ராமன் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கங்கானங்குளம் சமுதாய நலக்கூடத்தில், மரக்கன்றுகளை கலெக்டர் ஷில்பா நட்டு வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் கலெக்டர் வழங்கினார்.

Tags : Shilpa ,Thiruvirupanpalli ,day camp ,
× RELATED சிங்கப்பெண்ணே விமர்சனம்…