×

நெல் அறுவடை இயந்திரத்தில் தவறி விழுந்து டிரைவர் பலி

ஏர்வாடி, செப். 19: ஏர்வாடி சிறுமளஞ்சி பகுதியில் நேற்று முன்தினம் நெல் அறுவடை பணி நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் விஜி(26) என்பவர் நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை பணியில் ஈடுபட்டு வந்தார். வேலை முடிந்து இரவில், வழக்கம்போல் இயந்திரத்தின் மேல் பகுதியில் டிரைவர் விஜி தூங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து பலியானார்.

நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள், டிரைவர் உயிரிழந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஏர்வாடி போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், உதவியாளர் நம்பிராஜன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Driver crashes ,
× RELATED தார்பாய் விரித்தபோது லாரியில் இருந்து தவறிவிழுந்து டிரைவர் பலி