×

குருவிகுளத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

சங்கரன்கோவில், செப். 19: குருவிகுளத்தில் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா அதிமுக பொதுக்கூட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நடந்தது. குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஆறுமுகம், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், திருவேங்கடம் நகர செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் மோகன் வரவேற்றார். மகளிரணி துணை செயலாளரும், அமைச்சருமான ராஜலட்சுமி கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மக்கள் நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அதிமுகவுக்கு மட்டுமே தகுதி உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் விஜிலா சத்யானந்த் எம்பி, பேச்சாளர்கள் மோகன், கண்ணன் பேசினர். இதில் நெல்லை பேரங்காடி துணை தலைவர் வேல்சாமி, அரசு ஒப்பந்ததாரர்கள் தங்க மாரியப்பன், கடம்பூர் மாரியப்பன், குருவிகுளம் ஒன்றிய நிர்வாகிகள் லட்சுமணன், அய்யம்மாள் சேவன், கிருஷ்ணசாமி, அமலஜோதி, கோவிந்தசாமி, முனியசாமி, பால்பாண்டியன், ஜெகதீசன், சங்கரன்கோவில் நகர பேரவை செயலாளர் சவுந்தர், மாவட்ட மாணவரணி பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அய்யனார், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் சின்னராஜ், நிர்வாகிகள் தங்கம், ஒன்றிய மாணவரணி செயலாளர் ராமர்பாண்டி, ஐஆர்எட்டு ராஜேந்திரன்,  குருவிகுளம் தெற்கு கொடுங்கால்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக அமைச்சர் ராஜலட்சுமி முன்னிலையில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய அமமுகவினர் தெற்குபனவடலி தங்கமுத்து தலைமையில் அதிமுகவினர் இணைந்தனர். குருவிகுளம் ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags : Minister ,AIADMK ,
× RELATED அண்ணாமலை என்ன ஜோசியரா?: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி