×

இலங்கை தமிழர்கள் முகாம் பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

கரூர்,செப்.19: இலங்கை தமிழர்கள் முகாம் பின்புறம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாலை வசதி கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் ராயனூரில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இந்த முகாமின் பின்புற பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இந்த பகுதி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை கொண்டு வர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த பகுதியை சுற்றிலும் உள்ள பல பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதிக்கும் மக்கள் நலன் கருதி தார்ச்சாலை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Tags : camp ,Sri Lankan Tamils ,
× RELATED தர்மபுரியில் அறுவடை தாமதத்தால்...