×

அரவக்குறிச்சி அருகே பைக் மீது வேன் மோதியதில் ஒருவர் பலி 3 பேர் படுகாயம்

அரவக்குறிச்சி,செப்.19: அரவக்குறிச்சி அருகே பள்ளபட்டி சாலை பூலாம்வலசு பிரிவில் சரக்கு ஆட்டோவும், பைக்கும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்தனர்.கரூரை சார்ந்த 9 பேர் திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை முனியப்பன் சுவாமி கோயிலுக்கு சென்று விட்டு டாட்டா ஏசி வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அரவக்குறிச்சி அருகே பள்ளபட்டி சாலை பூலாம்வலசு பிரிவில் வந்த போது, பள்ளபட்டி ஷா நகரை சேர்ந்த அசாருதீன் (31). ஓட்டி வந்த பைக்கும், டாட்டா ஏசி வாகனமும் மோதியது. இதில் டாட்டா ஏசி வாகனத்தில் வந்த, கரூர் வெங்கமேட்டை சேர்ந்த ராஜா (55) படுகாயமடைந்தார். இவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்,
டாட்டா ஏசி வேன் டிரைவர் பழனிசாமி (40), மற்றும் குணசேகரன் (33), சுப்ரமணி (34), ஆகிய மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர், அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : van crashes ,Aravakurichi ,
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது