×

நலவாரிய செயல்பாடுகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

கரூர், செப்.19: நலவாரிய செயல்பாடுகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நலவாரிய செயல்பாடுகளை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், இரட்டை பதிவு தவிர்க்கப்பட கர்நாடகாவை போல ஸ்மார்ட்கார்டு வழங்க வேண்டும். பதிவு, புதுப்பித்தல், பணப்பயன்கள் தொழிற்சங்கங்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கை வலியுறுத்தி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த் மஸ்தூர்சபா (எச்எம்எஸ்) கரூர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், அமைப்பு செயலாளர் சுப்பிரமணி, பொதுமக்கள் தொழிலாளர்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். மாநில தலைவர் திருப்பதி, கீதா, ராஜசேகர் வாழ்த்தி பேசினர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே அரசு கல்லூரியில் கையெழுத்து இயக்கம்