×

160 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

கரூர்,செப்.19: கரூர் மாவட்டத்தில் 160 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார். கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மாற்றுத்திறனாளி குழந்தைகள் நேராக நிற்க உதவும் உபகரணம், தண்டுவடம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காற்று படுக்கை, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட் குழந்தைகள் அமர்வதற்கு ஏற்ற கார்னர் சீட், பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் கைபேசிகள் என 160 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.51லட்சம் மதிப்பிலான பல்வேறு உபகரணங்களை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வழங்கி கூறியதாவது:

ரெடிங்டன் பவுண்டேசன் நிறுவனத்தின் சமூதாய பங்களிப்பு நிதியில் இருந்து ரூ. 4.51லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும், பாதுகாவலர்களும் அவர்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். குழந்தைகள் தெய்வங்களுக்கு ஒப்பானவர்கள், அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கிய நிறுவனத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Tags : Collector ,
× RELATED புதுக்கோட்டை சிறுமி உடல் ஒப்படைப்பு: ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோர் அஞ்சலி!!!