×

விவசாயிகள் பயன்பெற அழைப்பு பொன்னமராவதி அடுத்த இந்திராநகரில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை பணி ஆய்வு

பொன்னமராவதி, செப். 19: பொன்னமராவதி அடுத்த இந்திராநகரில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை பணியை மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.பொன்னமராவதி அடுத்த தொட்டியம்பட்டி ஊராட்சி இந்திராநகரில் ஒரு சிலருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையில் டெங்கு மு ன்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை புதுக்கோட்டை மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைதொடர்ந்து அங்குள்ள அமல அன்னைப்பள்ளி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கு சென்று குடிநீர் தொட்டி மற்றும் கொசு உற்பத்தியாகும் பகுதிகளை தூய்மைப்படுத்த அறிவுத்தினார்.
மேலும் அந்த பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. டெங்கு தடுப்பு பணியாளர்கள் பிளிச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்பணியை மேற்கொண்டனர். டாக்டர் சரண்ராஜ் தலைமையில் மருத்துவ குழுவினர், மருத்துவ முகாமை நடத்தினர். டாக்டர் அருண்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கதமிழ்செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் ரவீந்திரன், உத்தமன், ராமலிங்கம், முத்தன் பங்கேற்றனர்.


Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...