சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு கோலப்போட்டி

திருக்காட்டுப்பள்ளி, செப்.19: தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் பூதலூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் செப்டம்பர் 2019 ஊட்டசத்து மாதம் “போஷன் அபியான்” என்ற பெயரில் கோலப்போட்டி நடந்தது.

பூதலூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மேரி ஜெயப்பிரபா தலைமை வகித்தார். போட்டியை பூதலூர் ஒன்றிய ஆணையர் காந்தரூபன் துவக்கி வைத்தார். போட்டியில் பூதலூர் ஒன்றிய அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் பங்கேற்றனர்.
Advertising
Advertising

பின்னர் உலக ஓசோன் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் வழங்கினார். இதைதொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வென்றவர்களுக்கு திட்ட அலுவலர் பரிசுகளை வழங்கினார். வெண்டயம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் மோகன்ராஜ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருப்பதி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இன்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி சத்துணவு அமைப்பாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Related Stories: