அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், செப். 19: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணம் காந்தி பார்க் எதிரில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
Advertising
Advertising

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்ததை கண்டிப்பது, மேலும் அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பார்க் எதிரில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். நகர தலைவர் மிர்சாவுதீன், இளைஞரணி தலைவர் செந்தில்நாதன், மாவட்ட பொது செயலாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Related Stories: