×

கும்பகோணத்தில் மறைமுக ஏலம் 1,017 குவிண்டால் பருத்தி விற்பனை

கும்பகோணம், செப். 19: கும்பகோணத்தில் நடந்த மறைமுக ஏலத்தில் 1,017 குவிண்டால் பருத்தி விற்பனையானது. கும்பகோணம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று நடந்தது. வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலை வகித்தார். முத்தூர், அகராத்தூர், வேப்பத்தூர், திருவிடைமருதூர், கடலங்குடி, கடம்பங்குடி, கருமாத்தூர், அசூர், ஆதனூர் மற்றும் ஊமையாள்புரத்தை சேர்ந்த 1000 விவசாயிகள், 1017 குவிண்டால் எடையுள்ள பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.

விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை கும்பகோணம், செம்பனார்கோவில், விழுப்புரம், ஆக்கூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 வியாபாரிகள் வந்து பருத்திகளின் தரத்தை பரிசோதனை செய்தனர். பின்னர் பருத்திக்கு விலை நிர்ணயித்து ஏலப்பெட்டியில் போட்டனர். இதில் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.5,659, சராசரியாக ரூ.5,289, குறைந்தபட்சமாக ரூ.4,689க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags : Auction ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்