மீட்க முடியாமல் தவிப்பு பாபநாசம் பகுதியில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணி நிறைவு

பாபநாசம், செப். 19: தினகரன் செய்தி எதிரொலியால் பாபநாசம் பகுதியில் புதிதாக அமைத்துள்ள வேகத்தடைகளுக்கு வௌ்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளது. பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் சமீபத்தில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் பாபநாசம் அண்ணா உணவகம் துவங்கி ரயில் நிலையம் வரை 6 வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக தினகரன் நாளிதழில் கடந்த 16ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: