×

பொதுமக்கள் கடும் அவதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

நாகை, செப்.19: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் நாகை வட்ட கிளை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.வட்டத் தலைவர் கங்காதரன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ராஜராமன் வரவேற்றார். ஆழியூர் தலைமை ஆசிரியர் குமரகுரு, நாகை தொழிற்கல்வி ஆசிரியர் ரவி, தோப்புத்துறை தலைமை ஆசிரியர் புயல்குமார், பிரதாபராமபுரம் தலைமை ஆசிரியர் புஷ்பராஜ், சாட்டியக்குடி இடைநிலை ஆசிரியர் சாந்தி ஆகியோர் பாராட்ட பெற்றனர். மாவட்டத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் சுப்பிரமணியன், மாநில செயலாளர் மகாலிங்கம், நாகை நடராஜன் தமயந்தி பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வட்டப் பொருளாளர் ரத்தினம் நன்றி கூறினார்.சத்துணவு திட்டத்தில் பணியாற்றுவோர்


Tags : Radhakrishnan ,authors ,
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்