×

பயணிகள் பாதிப்பு மழைக்காலம் தொடங்கிவிட்டதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்

காரைக்கால், செப்.19: மழைக்காலம் தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். என, மாவட்ட நலவழித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.காரைக்காலில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருவதால், ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரில் டெங்கு கொசுக்கள் அதிக அளவு உற்பத்தியாகும் என்பதால், மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில், காரைக்கால் மாவட்ட நலவழித்துறையின் கொசு மற்றும் பூச்சியல் நோய்தடுப்பு தொழில் நுட்ப உதவியாளர் சேகர் தலைமையில், ஊழியர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று, டெங்கு கொசுக்களை உருவாக்கும் புழுக்களை கண்டறிந்து அழித்து வருகின்றனர். தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளை சுற்றி தண்ணீர் தேங்கவிடாமல் இருப்பதில் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

காரைக்கால் நகர் பகுதியான அம்பேத்கர் நகரில், நேற்று மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் தலைமையில், ஊக்குனர் டாக்டர் மோகன்ராஜ் பொதுமக்களிடம் பேசியது: மழைக்காலம் தொடங்கியிருப்பதையடுத்து, மாவட்ட கலெக்டர் டெங்கு விழிப்புணர்வு மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், காரைக்கால் மாவட்ட நலவழித்துறை ஊழியர்கள் அவைத்து குடியிருப்பு பகுதிகளிலும் நேரில் சென்று டெங்கு கொசுக்களை அழித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக, பொதுமக்களும் ஒத்துழைக்கவேண்டும். வீடுகளைச் சுற்றியுள்ள சிறு நீர் தேக்கங்களில், நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். உபயோகப்படுத்தும் தண்ணீர் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும். தேவையற்ற பாத்திரங்களை கவிழ்த்து வைக்க வேண்டும். தேவையற்ற டயர், டீ கப், தேங்காய் ஓடு, உரல், நீர் தொட்டிகள் ஆகியவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் வலி மற்றும் வாந்தி, உடல் சோர்வு இருந்தால் அது டெங்குவாக இருக்கலாம். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். என்றார்.

Tags : monsoon season ,areas ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை