×

விவசாயிகள் மகிழ்ச்சி குடிமராமத்து திட்ட பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது

வேதாரண்யம், செப்.19:குடிமராமத்து திட்ட பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று, வேதாரண்யத்தில் ஆய்வு நடத்திய கூடுதல் தலைமை செயலாளர் சத்யகோபால் கூறினார்.வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் குடிமராமத்து திட்டம் மற்றும் தூர்வாரும் பணிகள் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருக்குவளை வட்டம், திருவாய்மூர் கிராமத்தில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீராவட்டனார் வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும், வேதாரண்யம்வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் மல்லியனாற்றின் கீழ் குமிழி சிறப்பு பழுதுபார்க்கும் பணிகளையும், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும் இக்கிராமங்களில் குடிமராமத்துதிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பகுதிகளை கூடுதல் தலைமை செயலாளர் சத்யகோபால் பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பாசனசங்களை சேர்ந்த விவசாயிகளை சந்தித்து, இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளுக்கான பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடியபோது, இப்பகுதிகளுக்கு தண்ணீர் வந்து நீண்டகாலம் ஆகிறது. ஆனால் இவ்வாண்டு தண்ணீர் சீக்கிரமே வந்துள்ளது எனவும் தெரிவித்தனர். இதனால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தமிழ்நாடுஅரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்துதிட்டம் மற்றும் தூர்வாரும் பணிகள் ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதில் பொதுமக்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், சப்-கலெக்டர் கமல் கிஷோர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்