கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் அமைச்சர் குறை கேட்பு

கோவில்பட்டி, செப்.19: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர்ராஜூ நோயாளிகளிடம் குறைகளைகேட்டறிந்தார். கோவில்பட்டியில் இய ங்கி வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  500க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர்ராஜூ மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர், மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் அடிப்படைகள் வசதிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அனைத்து வார்டுகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

அவருடன் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், உறைவிட மருத்துவர் டாக்டர் பூவேஸ்வரி, அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன், ராமச்சந்திரன், துறையூர் கணேஷ்பாண்டியன், ரமேஷ், அன்புராஜ், வேலுமணி, ஈஸ்வரப்பாண்டியன், அருணாசலசாமி, ஆபிரகாம் அய்யாத்துரை, மகேஷ்குமார், பாலமுருகன் மற்றும் மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் உடன் சென்றனர்.

Related Stories: