ஆத்தூர் சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா

ஆறுமுகநேரி, செப்.19:  ஆத்தூர் சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. ஆத்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோயில் கொடைவிழா கடந்த 10ம்தேதி கால்நாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்களும் மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தா பிறப்பும் தீபாராதனையும் நடந்தது.

கொடைவிழாவான 17ம்தேதி காலை 9 மணிக்கு தாமிரபரணி ஆற்றின் சோம தீர்த்த கட்டத்தில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டது. மதியம் 12 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தேவதைகள் சிறப்பு அபிஷேகமும், விமான கும்பாபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்சிகால தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  இரவு 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து கும்பம் எடுத்து வரப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், அம்மன் வீதியுலாவும் நடந்தது.  நேற்று அதிகாலை 3 மணிக்கு கும்பம் சேர்க்கையும், படைப்பு தீபாராதனையும் காலை 10மணிக்கு மஞ்சள் நீராடல், 1 மணிக்கு தீபாராதனைநடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: