சாலை பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தியாகதுருகம், செப் . 19: தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட பிரிதிவிமங்கலம் ஊராட்சியில் சாலை விரிவாக்கப்பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் முதல் மடம் சாலை வரையிலான சாலை விரிவாக்கப்பணி ரூ.108.04 லட்சம் செலவில் நடந்து வருகிறது. பிரிதிவிமங்கலம் ஊராட்சியில் பாரத பிரதமர் மேம்பாட்டு நிதியின் கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டது. அங்குள்ள காலனி பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி  அலுவலர் இந்தராணி தலைமையில் துணை வட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் உதவி பொறியாளர் கோமதி முன்னிலையில்  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதையொட்டி அங்கு இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் ஆகியோர் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: