மணல் கடத்திய 2 லாரி மாட்டு வண்டி பறிமுதல்.

பண்ருட்டி, செப். 19: பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் அரசு அனுமதியின்றி மணல் எடுக்கப்படுவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 5 அடி ஆழத்திற்கு மேல் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு மணல் எடுக்கப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து அங்கு நின்றிருந்த 2 லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து டிரைவர்களை தேடி வருகின்றனர். இதேபோல் பண்ருட்டி அருகே ரெட்டிக்குப்பம் பகுதியில் உள்ள மலட்டாற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED நாகர்கோவில் அருகே மணல் கடத்தி வந்த லாரி சிக்கியது