×

சிஐடியு பயணகுழுவுக்கு வரவேற்பு

விழுப்புரம்,  செப். 19:  காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு, துாத்துக்குடியில்  இருந்து சென்ற இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) பயணக்குழுவுக்கு  விழுப்புரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையிலான நிர்வாகிகள்  வரவேற்பு அளித்தனர். பொருளாதார சீர்கேடு, வேலையில்லா திண்டாட்டம்  உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை பயணக்குழு நிர்வாகிகள்  எழுப்பினர். இதையடுத்து பயண குழுவினர், திண்டிவனம் வழியாக,  காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டனர். தலைவர் முத்துக்குமரன், துணை தலைவர்  குப்பன், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : CITU Travel Group ,
× RELATED திருட்டு, வழிப்பறி வழக்கில்...