×

ஆட்டோவில் சென்ற பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி

ஆவடி, செப். 19: திருமுல்லைவாயலில் ஓடும் ஆட்டோவில் பெண்ணிடம் நகை, செல்போனை பறிக்க முயற்சித்த 2 பெண்களை போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.ஆவடி அடுத்த அண்ணனூர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுமதி (26). நேற்று முன்தினம் மதியம் திருமுல்லைவாயலில் இருந்து ஆவடி நோக்கி ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே அமர்ந்திருந்த 2 பெண்கள், சுமதியின் செல்போன், ஒரு சவரன் சங்கிலியை பறிக்க முயற்சித்தனர்.இதில் சுமதி திடுக்கிட்டு அலறி சத்தம் போடவே, ஆட்டோவை டிரைவர் நிறுத்தியுள்ளார். 2 பெண்களும் தப்பியோட முயற்சித்தனர்.அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில்,  இருவரும் மானாமதுரை-சிவகங்கை சாலை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராமலட்சுமி (65), முனியம்மாள் (58) என்பதும், இவர்கள், அம்பத்தூர் பகுதியில் ஒரு கடையில் நகை வாங்குவது போல் நடித்து, அங்கு நகை கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் கைது செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED பெண்ணிடம் வழிப்பறி