×

ஊத்துக்கோட்டை அருகே ஓடையில் அழுகிய முதியவர் சடலம்

ஊத்துக்கோட்டை, செப். 19: ஊத்துக்கோட்டை அருகே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை போலீசார் மீட்டு கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.ஊத்துக்கோட்டை அருகே  செஞ்சியகரம் ஓடைப்பகுதியில் முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து  கிடப்பதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்,  எஸ்.ஐ. சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்றனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அழுகிய நிலையில் முகத்தில் ரத்தம் உறைந்த நிலையில் சடலமாக கிடந்தார். இவரைப்பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், சடலமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து முதியவர் மயங்கி விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து, இங்குள்ள ஓடைப்பகுதியில் சடலத்தை போட்டு விட்டு சென்றார்களா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும், இறந்து போன முதியவர் சிவப்பு நிற கட்டம் போட்ட டி சர்ட்டும், லூங்கியும், மேல் துண்டும் அணிந்திருந்தார். மேலும் போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி இது குறித்து விஏஒ முருகையன் கொடுத்த புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags : Uthukottai ,stream ,
× RELATED சிங்கம்பட்டி ஜமீன் உடல் தகனம்