×

காசிமேடு அருகே நடுக்கடலில் காரைக்கால் மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு

சென்னை, செப். 19: காசிமேடு மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலில் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் காரைக்காலை சேர்ந்த மீனவர்களின் விசைப்படகு பழுதடைந்து நின்றது. அதில் இருந்த 6 பேரை காசிமேடு மீனவர்கள் சிறைபிடித்தனர்.பின்னர் பழுதடைந்த படகுடன் 6 பேரையும் நேற்று சென்னைக்கு அழைத்து வந்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், காரைக்காலை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வந்தது கார்த்திக் (23), பாபு (40), பாலசுப்ரமணி (35), சங்கர் (47), சின்னதம்பி (39), ஜெயபாரதி (17) என தெரிந்தது. அவர்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தனர்.காரைக்கால் மீன்வளத்துறையினரும் தமிழக மீன்வளத்துறையினரும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : fishermen ,Karaikal ,Kasimedu ,
× RELATED கொரோனா அச்சத்துடன் ஈரானில் தவிக்கும்...