×

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு அடையாள அட்டையில்லாத நபர்களுக்கு அனுமதி மறுப்பு

சென்னை, செப். 19: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு திங்கட்கிழமை ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், உயர் நீதிமன்றத்தில் வரும் 30ம் ேததி குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக டெல்லியிலிருந்து ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், கடிதம் எழுதிய நபர் தனது முகவரியை மோதி நகர், சுதர்ஸன் பார்க், டெல்லி என்றும், தனது பெயர் ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்றும் தனது மகனுடன் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் பல இடங்களில் செப்டம்பர் 30ம் தேதி வெடிகுண்டு வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2 நாட்களாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கமாண்டோ படைகள் அனைத்து நுழைவாயில்களிலும் குவிக்கப்பட்டிருந்தனர். உரிய அடையாள அட்டை அல்லது அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.மோப்ப நாய் பிரிவு போலீசார் உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர். மேலும், மெட்டல் டிடெக்டர் மூலம் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் சோதனை செய்தனர். இந்த பாதுகாப்பு இன்றும் தொடர்கிறது.



Tags : persons ,Madras High Court ,
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு