×

தொழிலாளர் துறை சார்பில் 21ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி, செப். 19: புதுச்சேரி தொழிலாளர் துறை சார்பில் வரும் 21ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து புதுச்சேரி தொழிலாளர் துறை கூடுதல் செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குனருமான வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை  சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21ம் தேதி (சனி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இம்முகாமில் புதுச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த 12 முன்னனி தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று 600க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கு நேர்முக தேர்வு நடத்தவுள்ளது.

 இதற்கு 18 வயது நிரம்பிய பிஇ., பி.டெக், பி.காம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி ஓட்டல் மேலாண்மை, எம்டெக், எம்சிஏ, எம்.காம், எம்பிஏ, எம்பிஏ(எச்ஆர்) மற்றும் ஏதாவது முதுநிலை பட்டம், ஐடிஐ, டிப்ளமோவில் இசிஇ, மெக்கானிக்கல், ஓட்டல் மேலாண்மை, பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி ஆகிய கல்வித்தகுதி கொண்ட நபர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கப்பெறும் வேலை காலியாக உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்பவர்கள், தங்களது சுயவிவர தகவல், மற்றும் கல்வி தகுதிக்கான சான்றிதழ்களுடன் வரும் 21ம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Employment Camp ,Labor Day ,
× RELATED விருதுநகரில் மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!