முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு துவக்கம்

புதுச்சேரி, செப். 19:   புதுவை லாஸ்பேட்டையில் உள்ள காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி நேற்று தொடங்கியது. மையத்தின் இயக்குனர் சங்கர்ராஜூ தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பை புதுவை பல்கலைக்கழக மாணவர் நல முதன்மையர் சாகின்சுல்தானா தொடங்கி வைத்தார்.

பயிற்சியில் கருத்தாடல் திறன், சூழல் விழிப்புணர்வு, உடல்நலன், தற்பாதுகாப்பு, மதிப்புக்கல்வி, ஆளுமை வளர்ச்சி போன்ற தலைப்புகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படுகின்றன. வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், இம்மையத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இலக்கிய மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.  ஏற்பாடுகளை துறை தலைவர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணையர் சிவமாதவன், பேராசிரியர்கள் பெரியாண்டி, கற்பகம், அருணா, சுஜாதா, கஸ்தூரி, செஷாபத், முத்து, ராஜாபாதர், இளங்கோவன், தீனதயாளன் ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிலரங்கம் வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.

Related Stories: