×

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

புதுச்சேரி, செப். 19:    புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இயக்குநர் சுப்பா ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கால்நடை உரிமையாளர்களின் நலன் கருதி புதுச்சேரி அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை, புதுச்சேரி பகுதியில் உள்ள அனைத்து கொம்யூன்களிலும் கீழே கொடுக்கப்பட்டு அட்டவணைப்படி இன்று (19ம் தேதி) முதல் அக்.12ம் தேதி வரை தேசிய கோமாரி நோய் தடுப்பு முகாம்கள் நடக்கிறது. அதன்படி, செப்.19, 20, 21ம் தேதி ஆகிய அரியாங்குப்பம் மற்றும் மதகடிப்பட்டு கால்நடை மருந்தகங்களிலும், செப்.23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் கரியமாணிக்கம் மற்றும் தட்டாஞ்சாவடி கால்நடை மருந்தகங்களிலும், செப்.30, அக்.1, 3, 4, 5 ஆகிய தேதிகளில் வில்லியனூர் மற்றும் பாகூர் கால்நடை மருந்தகங்களிலும், அக்.9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் திருக்கனூர், புதுச்சேரி மற்றும் சிவராந்தகம் மருந்தகங்களிலும் கோமாரி நோய் தடுப்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாம்களில், இணை இயக்குநர்களின் மேற்பார்வையில் கால்நடை மருத்துவர்கள், கால்நடை உதவியாளர்கள் மற்றும் கால்நடை பணியாளர்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடுவார்கள். எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது அனைத்து கால்நடைகளையும் கோமாரி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : vaccination camp ,
× RELATED முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்