×

மழை நீரில் மூழ்கிய பயிர்கள் அதிகாரியிடம் விவசாயிகள் முறையீடு

சிதம்பரம், செப். 19: கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குச்சிப்பாளையம் கிராமத்தில் பூதங்குடி தென்பிரிவு வாய்க்கால் பொதுப்பணித்துறையினரால் வெட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தண்ணீர் வெளியே செல்ல வழியில்லாமல் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில் விதைகால் விட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி வருகிறது.

நேற்று காலை குச்சிப்பாளையம் கிராம விவசாயிகள் அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் தங்கமணி தலைமையில் விவசாயிகள் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் செயற்பொறியாளர் சாம்ராஜை சந்தித்து உடனடியாக தங்கள் பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி வாய்க்கால் வெட்டும் பணியை துரிதப்படுத்தி முடிக்க வேண்டி கோரிக்கை மனு அளித்தார். அவர் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

Tags : crops officer ,
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...