9ம் வகுப்பு மாணவி கடத்தல்

சிதம்பரம், செப். 19: சிதம்பரம் அருகே 9ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு பகுதியில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாணவி மாயமான அன்று மாலை மர்ம நபர் ஒருவர் மாணவியின் சக தோழிகளுக்கு போன் செய்து, சம்பந்தப்பட்ட மாணவி தன்னிடம் இருப்பதாகவும், யாரும் தேட வேண்டாம் எனவும் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இதுபற்றி  சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து மாணவியையும், அவரை கடத்திச்சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.

Tags : student abduction ,
× RELATED கல்வித்துறை ஊழியர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு