பாடியநல்லூர் ஊராட்சியில் சாலையை ஆக்கிரமித்து அதிமுக கொடிக்கம்பம்: பொதுமக்கள் அதிருப்தி

புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்காக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை முழுவதும் சாலையோரம் அதிமுகவினர் கொடி கம்பங்களை நட்டு வைத்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து காவல் துறையில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பெயரளவிற்கு இரண்டு கொடி கம்பங்களை அகற்றி விட்டு சென்றுவிட்டனர். இதனால் மீதமுள்ள கொடிக்கம்பங்கள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவம்  நடந்தது. ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இந்த கொடிகம்பங்களை அதிமுகவினர் நட்டு வைத்ததை கண்டு பொதுமக்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.

Related Stories: